மோட்டார் சைக்கிளில் 2 நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

0
18

மட்டக்களப்பு, மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், சித்தாண்டி நாவலர் வீதியைச் சேர்ந்த பி. சதீஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சித்தாண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பாக தெருநாயுடன் மோதிக் கட்டுபாட்டை இழந்து, எதிர்த் திசையில், சித்தாண்டி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சித்தாண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் உயிழந்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்கள், மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மூவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம், மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.