யாருமே காதல் கடிதம் கொடுத்ததில்லை

0
11

கல்லூரியில் படித்த காலத்தில் தனக்கு யாருமே காதல் கடிதம் கொடுத்ததில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தனது கல்லூரிகால சம்பவங்களை பேட்டியொன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ஒரு திரைப்பட விழாவில் தீவிர இரசிகர் ஒருவர் ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தால் பெட்டி முழுவதும் புகைப்படங்களும், ஒரு காதல் கடிதம் இருந்தது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த இரசிகர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த காதல் கடிதத்தை தான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். கல்லூரியில் படித்த காலத்தில் யாரும் காதல் கடிதம் கொடுத்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.