யாழில் ஒரேநாளில் திறந்து வைத்தார் வடக்கு ஆளுநர்

0
15

யாழ்.குடாநாட்டில் உள்ள பாடசாலைகளில் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த கட்டத்தொகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவற்றை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

ஓரேநாளில், நான்கு பாடசாலைகளின் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடதொகுதி நிர்மாணங்கள் மாணவர் பயன்பாட்டிற்காக உத்தியோக பூர்வமாக வழங்கியமை உட்பட வடக்கு கல்வி மேம்பாட்டிற்காக யாழ்.கல்விச் சமூகத்தினர் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், யாழ்.சென்.ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தின், புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேட்போர் கூடத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்த ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், கல்வியில் சிறந்து விளங்கிய நமது மாகாணம் அதன் பெருமையை தற்போது இழந்துள்ளது. அப்பெருமையை மீண்டும் நாம் பெற வேண்டும். மாகாணத்தின் தலைசிறந்த பாடசாலைகளுள் ஒன்றான இப்பாடசாலையின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக்கட்டடத்தை திறந்து வைத்த ஆளுநர், மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவ்வாறிருக்க மாணவர்கள் ஏன் சீரழிந்து போகிறார்கள்? சமுதாயம் ஏன் சீரழிந்து போகின்றது? போன்ற கேள்விகளுக்கான பதில் ஆசிரியர்களிடம தான் உள்ளது. உயிர் உள்ள வளங்களாகத்தான் மாணவர்களைப் பார்க்கின்றேன். ஏனைய வளங்களெல்லாம் இவர்களின் வளர்ச்சிக்காகத்தான் உள்ளன என்று குறிப்பிட்டார்.

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலையின் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதியை அவர், எமது மாகாணத்தில் சமுகப்பிறள்வுகள் உட்பட முறையற்ற பல புதிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் வறுமையென்று சொல்லப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாடசாலை மாணவர்களாக இருக்கும் பலரிடம் விலையுயர்ந்த மோட்டார் சைச்கிள்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் இருக்கின்றன.

ஆகவே கட்டடங்கள் கட்டுவதால் மட்டும் கல்வி துறை முன்னேறும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மரங்களின் நிழலில் கல்வி கற்று வளர்ந்தவர்கள் நாங்கள். வசதிகள் மட்டும் வடக்கின் கல்வி புலமைக்கு முக்கியமானதாக இருக்க முடியாது. வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு பௌதீக வளங்கள் தாராளமாக செய்யப்பட்டுள்ள என்றர்.

வயாவிளான் றோ.க.த.க.பாடசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த ஆளுநர், வயவிளான் என்ற பழம்பெரும் கிராமத்தில் போரின் காரணமான இடப்பெயர்வுகள் ஏற்பட்டன. அதன் பின்னர் இக்கிராமத்தின் இன்றைய நிலையை எண்ணி நான் வேதனையடைகின்றேன். காணிகளை விடுவிக்க நாங்கள் பலமுறை முயன்றபோது மக்கள் மீள்குடியேறத் தயாரகவில்லை. பலர் வெளி நாடுகளில் வசிக்கிறார்கள்.

ஆகவே, உங்கள் உறவினர்களிடம் இங்கு ஒருமுறையாவது வந்து அவர்களின் காணிகளை சீரமைத்து இங்கிருக்கும் தமது உறவினர்களிடமாவது தற்காலிகமாக ஒப்படைக்கச் சொல்லுங்கள். என்றே இராணுவ அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆகவே எஞ்சியுள்ள காணிகளை விடுவித்து மக்கள் மீளக்குடியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குகங்கள். எனக்கும் இக்கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது உறவினர்களும் இங்கிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.