யாழில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றன… அனந்தி சசிதரன் குற்றச்சாட்டு

0
33

யாழ்ப்பாணத்தின் தேர்தல் பெறுபேறுகளில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் எழுவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சசிகலா ரவிராஜினை அவரது இல்லத்தில் வைத்து நேற்று சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் விருப்பு வாக்கினை அறிவிப்பதற்கு நீண்ட நேரமாக காலம் தாமதித்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டமையின் காரணமாகவே சந்தேகம் நிலவுவதாக சசிகலா ரவிராஜ் இதன்போது ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அரச அதிகாரிகளை பரிசோதப்பதற்கு தமது தரப்பு ஒரு போதும் தயாரில்லை என நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.