யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தை மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
18

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தை கொத்தணியைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது உடுவிலை சேர்ந்த 6 பேருக்கும், தெல்லிப்பழையை சேர்ந்த 3 பேருக்கும், நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த 2 பேருக்குமாக 13 பேருக்கு தொற்று உறுதியானது.

அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட சோதனையில் தெல்லிப்பழையை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.