யாழ்.பகுதியில் பேருந்துடன், மோட்டர்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் காயம்

0
7

யாழ். இத்தாவில் பகுதியில் பேருந்துடன், மோட்டர்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நிறுத்தி வைக்கபட்டிருந்த பேருந்தில், மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் மோதியதாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.