யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

0
283

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 120 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் (P.C.R பரிசோதனை) 3 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட துபாய் நாட்டில் இருந்து வருகைதந்த 3 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்

  • போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் -2 பேர்
  • போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 14 பேர்
  • முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம் – 98 பேர் (மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)
  • ஆதார வைத்தியசாலை வல்வெட்டித்துறை – 3 பேர்
  • பொது வைத்தியசாலை கிளிநொச்சி – 3 பேர்

சமூகங்களிக்கிடையில் பொதுவாக கொரோனா தொற்று இல்லாத சூழலில் அரபு நாடுகளில் இருந்து வருபவர்களிற்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேலும் எமது செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டார்.