யாழ்- மருதனார்மடம் இதுவரை 88 தொற்றாளர்கள்!

0
4

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து. மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையின் போது அளவெட்டியை சேர்ந்த ஒருவர், மல்லாகத்தை சேர்ந்த ஒருவர், இளவாலையை சேர்ந்த ஒருவர் என மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் 110 பேருக்கான பரிசோதனையை மேற்கொண்ட போது நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 5 பேருக்கும், சண்டிலிப்பாய் பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் என ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.

முல்லேரியா ஆய்வுக்கூடத்தில் 300 பேருக்கான பரிசோதனை செய்த போது உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதியானது.