யாழ்.மருதனார்மடம் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

0
8
50 / 100

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

இவர்கள் இருவரும் தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்தவர்கள் என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 133ஆக உயர்வடைந்துள்ளது.