ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்

0
10

திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு நடிகை லட்சுமி மேனன் பதில் அளித்துள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன்’, ‘பாண்டிய நாடு’, ‘கொம்பன்’ என பல வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் அவரிடம், ‘நீங்கள் சீக்கிரம் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்வை வாழுங்கள். தயவுசெய்து சினிமாவை விட்டு விலகுங்கள். நீங்கள் ஏஞ்சல்” என்று குறிப்பி்ட்டுள்ளார்.
அதற்கு லட்சுமி மேனன் அளித்துள்ள பதிலில், ”என் நலம் விரும்பியின் வேண்டுகோளை பாருங்கள். என்னை போன்ற ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளவேண்டுமாம். பரிதாபமானநிலை” என்று விமர்சித்துள்ளார்.