ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்

0
15
12 / 100

பிரபல நடிகராக வலம் வரும் சோனு சூட் சாலையோர உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து ரியல் ஹீரோ என பெயர் எடுத்தவர் சோனு சூட். இவர் தற்போது ரசிகர் ஒருவர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு சர்பிரைசஸ் விசிட் கொடுத்துள்ளார்.

ரசிகரின் சாலையோர உணவகத்திற்கு சென்ற சோனு சூட் சமையலுக்கு உதவி செய்தும் அங்கு சாப்பிட்டும் மகிழ்ந்தார். சோனு சூட் உணவகத்திற்கு வந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலர் அங்கு திரண்டனர். அவர்களுடன் கைகுலுக்கியும், புகைப்படம் எடுத்துக் கொண்டும் உற்சாகப்படுத்தினார்.
இது குறித்து சோனு சூட் கூறும்போது, அனில் என்பவரது உணவகத்தை சமூக வலைதளத்தில் பார்த்தேன். இந்த உணவகத்தில் சாப்பிட விரும்பினேன். இன்று பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. இங்கு ஃப்ரைட் ரைஸ் மற்றும் கோபி மஞ்சுரியன் சாப்பிட்டேன் என்றார்.
சோனு சூட்டின் சமூக சேவையை பார்த்து அவர் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. அதனால் தான் அவருடைய பெயரை எனது சாலையோர உணவகத்திற்கு வைத்தேன் என்றார் உரிமையாளர் அனில்.