ராஜ வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டம் இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு… மற்றவர்கள்?

0
2721

ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நிர்ணயப்பதில் கிரகங்களின் நிலைப்பாடானது முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பிறக்கும் நேரத்தில் அமையும் கிரக நிலையை பொறுத்துதான் நம்முடைய பிறந்த ராசியும், நட்சத்திரமும் நிர்ணயிக்கப்படுகிறது. குழந்தைகளின் நட்சத்திரத்தை கணிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது.

வேத ஜோதிடத்தின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. நம் வாழ்க்கையின் பாதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை நிர்ணயிப்பது நம்முடைய பிறந்த நட்சத்திரம்தான். இது வேத ஜோதிடத்தின் ஒரு தனித்துவமான பகுதியாகும். ஒருவரின் கர்மா எவ்வாறு வெளிப்படும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இறுதியில் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் நட்சத்திரங்கள் உதவுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் அதிர்ஷ்டமான நட்சத்திரங்கள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிருத்திகை நட்சத்திரம்

அக்னியால் ஆளப்படுகிறது. சுத்திகரிப்பு மற்றும் தெளிவுபடுத்தலை வழங்கும் ஆதாரமாக அக்னி புனிதமாக கருதப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது. இந்த நட்ச்சத்திரத்தின் கீழ் பிறந்த மக்களின் வாழ்க்கையில் அக்னியின் பிரகாசம், கூர்மை, ஆற்றல் மற்றும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவை இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இவர்களின் தனித்துவத்துடன் வலிமையாக இருப்பார்கள்.

திருவோண நட்சத்திரம்

விஷ்ணு பகவானால் ஆளப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்த மக்களின் வாழ்க்கையில் செல்வம், ஞானம் மற்றும் திறந்த மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டுவருகிறார். இவர்கள் எப்போதும் தலைமயிடத்தில் இருப்பார்கள்.

புனர்பூசம்

புனர்பூச நட்சத்திரம் அதிதி தேவியால் ஆளப்படுகிறது. அனைத்து நன்மைகளுக்கும் தாயாக அவர் கருதப்படுகிறார். அனைத்து தொடக்கங்களுக்கும் மூலாதாரமாக இருப்பது அவர்தான். இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் மற்றவர்கள் மீது இரக்கமுள்ளவர்களாகவும், அனைவரும் விரும்புபவராகவும் இருப்பார்கள். இவர்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

மகம்

மக நட்சத்திரத்தை பித்ரு பகவான் ஆளுகிறார். இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் வலிமையான ஆளுமையும், அனைவரையும் வெல்லும் வீரமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எப்பொழுதும் கடமை உணர்வு நிறைந்திருக்கும். இதனால் இவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் இடத்தில் இருப்பார்கள்.

பூசம்

பூச நட்சத்திரத்தை பிரகஸ்பதி ஆள்கிறார். இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் ஞானமும் விழிப்புணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவித எதிர்மறை எண்ணங்களும், சக்தியும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க இயலாது. அதனால் இவர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சரியாக இருப்பதுடன் முழுமையான வாழ்க்கையை வாழ்வார்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தை விஸ்வதேவா ஆளுகிறார். இந்த நட்சஷத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் தர்மம், கருணை மற்றும் நல்ல குணத்தால் பிணைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இவர்களின் இந்த நல்ல குணங்கள் இவர்களை உச்சத்திற்கு அழைத்து செல்லும்.

ஸ்வாதி

ஸ்வாதி நட்சத்திரத்தை வாயுபகவான் ஆளுகிறார். வாயு என்பது காற்றின் கடவுள் என்று அனைவரும் அறிவோம், உயிர்வாழ அத்தியாவசியமானது காற்றாகும். உள் மற்றும் வெளிப்புற காற்றுகளை அல்லது பிராணனை தொடர்புபடுத்துபவர் வாயு என்று நம்பப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் வலிமை, சக்தி மற்றும் இயக்கத்தின் ஆதாரமாக கருதப்படுகிறார்கள்.

விசாகம்

விசாக நட்சத்திரத்தை இந்திரனும் அக்னியும் ஆளுகிறார்கள். இந்த இரட்டைக் கடவுள்கள் அடிப்படையில் அரசியல் மற்றும் ஆன்மீக சக்தியைக் குறிக்கின்றன. விசாக நட்சத்திர மக்கள் கூட்டணிகளையும் ஆதரவையும் கொண்டு வருகிறார்கள். இவர்கள் எப்பொழுதும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பொறுப்பில் இருப்பார்கள். வாழும்போதே தேவ வாழ்க்கையை வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இவர்கள்.