வட,தென் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை

0
5

வடக்கு, சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (17) இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் (18) காலை வேளையில் தென் மாகாணத்தின் பல இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.