வவுனியா – வைரவப்புளியங்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்

0
16

வவுனியா – வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு முன்பாக நேற்று இரவு 8.40 மணியளவில் இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள மதுபான சாலையில் மது அருந்திக் கொண்டிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் சேவைக்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.