வாகனம் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உயிரிழ

0
6

முல்லைத்தீவு, வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த வாகனம் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.

விபத்தின்போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 வயதுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குளத்தில் மூழ்கிக் காணாமல் போயுள்ள கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன் (37), அவரது மகளாக ரசீந்திரன் சார்ஜனா (3) ஆகியோரை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.