வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் அஜித்: வைரல் புகைப்படங்கள்

0
1
16 / 100

‘வாகா’ எல்லையில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

’வலிமை’ படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லையில் அஜித் ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் உரையாடியுள்ளார்.

ராணுவ வீரர்களுடன் கைக்குலுக்கும் புகைப்படங்களும் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.