வாக்குச் சீட்டில் பிரபாகரனின் பெயர்… அதிர்ச்சியில் உறைந்த தேர்தல் பணியாளர்

0
1806

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9 வது பாராளுமன்றத் தேர்தலில் பல பரபரப்பான விடயங்கள் அரங்கேறியிருந்தன.

அதேபோன்று வாக்குச் சீட்டு ஒன்றில் “எனது தெரிவு பிரபாகரன் மட்டுமே” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

வாக்காளர் ஒருவர் கட்சி சின்னத்திற்கும், வேட்பாளர்களுக்கும் புள்ளடி இடுவதற்கு பதிலாக இந்த வாசகத்தினை வாக்குச் சீட்டில் எழுதிச் சென்றுள்ளார்.

வாக்கு எண்ணும் நிலையத்தில் இதனை கண்ணுற்ற பணியாளர் ஒருவர் தனது முகநூல் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.