‘விக்ரம்’ பட அப்டேட் – கமலுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்?

0
11

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்த லோகேஷ் கனகராஜ், கைதி பட வெற்றியின் மூலம் மேலும் உயர்ந்தார். தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.
இதனிடையே கமலின் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு விக்ரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பஹத் பாசில் தான் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.