பிரபல கால்பந்து வீரர் விண்ணில் மறைந்த மாரடோனா ! கண்ணீர் வடித்த ரசிகர்கள் !!

0
66

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா  மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்த நிலையில், வீட்டில் இருந்த மாரடோனாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உயிர் பிரிந்தது.

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் போற்றப்படும் மாரடோனா, 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 1986-ம் ஆண்டு மாரடோனா தலைமையிலான அர்ஜெண்டீனா அணி உலகக்கோப்பையை வென்றது. அப்போது போட்டியின் சிறந்த வீரராகவும் மாரடோனா தேர்வு செய்யப்பட்டார்.