விபத்துக்களினால் 15 பேர் உயிரிழப்பு..

0
6
7 / 100

கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 06 பேர் பாதசாரிகள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் ஐவரும், முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இருவர் சைக்கிள் மற்றும் வேன் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 120 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.