வீட்டில் இரண்டு சடலங்கள்.மினுவாங்கொட

0
8

மினுவாங்கொட ஓபாத பிரதேச வீடு ஒன்றுக்குள் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவியே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவரினால் மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பின்னர் கணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் 37 வயதுடைய ஒருவராகும். அவரது கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இதற்கு காரணம் என நம்பபப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.