வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் நாடு திரும்பினர்

0
7

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அதனடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 322 இலங்கையர்களும் கட்டாரில் இருந்து 22 இலங்கையர்களும் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் ஓமானில் இருந்து 150 இலங்கையர்கள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.