வேகமாகச் சென்றதால் இடம்பெற்ற விபத்து… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

0
6

வேகமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப் பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி வேகமாக சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் உயிரிழந்ததுடன் இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க நஜாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்ப இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.