வைத்தியர் ஒருவர் எயார் ரைபிலால் சுட்டதில் 17 வயது மாணவன் உடல்நிலை மோசமாக..

0
16

கொழும்பு- பன்னிப்பிட்டியின் Arawwala பகுதியில் உள்ள தர்மபாலா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது பாடசாலை மாணவன், விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள தோட்டத்தில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது வைத்தியர் ஒருவர் எயார் ரைபிலால் சுட்டதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. மாணவன் மகரஹம அபேக்ஷா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரே சுட்டுள்ளார். இதையடுத்து வைத்தியரை மகரஹம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த மாணவர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றும் அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்ட வைத்தியர் இன்று நுகேகொட மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.