யாழ் – மீசாலை வடக்கு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர்

0
7
11 / 100

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பிள்ளைகளின் தந்தையான, 47 வயதுடைய ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.