வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! வளிமண்டலவியல்

0
12
11 / 100

வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் பலத்தமழை பெய்யக்கூடும் என்றும், மழை வீழ்ச்சி 150 மில்லிமீற்றருக்கு அதிகமாக காணப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மழைபெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.