மாமனாரின் வீட்டுக்கு வந்த மருமகள் திடீரென மரணம்..

0
9
11 / 100

மாமனார் இறந்த செய்தி கேட்டு மாமனாரின் வீட்டுக்கு வந்த மருமகள் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மகரகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடையை சேர்ந்த 46 வயதான பெண்ணே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார்.

தனது கணவரின் 80 வயதான தந்தை உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்த பெண் தனது கணவருடன் மகரகமவில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற பெண் திடீரென சுகவீனமுற்று கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே அவர் இறந்து விட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 80 வயதான நபருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பெண் திடீரென உயிரிழந்தமைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக மகரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.