ரல்மடுவ பிரதேசத்தில் மர்மமாக இறந்து கிடக்கும் பறவைகள்..

0
9
11 / 100

ரல்மடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வில்பத்து தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள நெற்காணிகளில் ஏராளமான பறவைகள் மர்மமாக இறந்து கிடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட வனவிலங்கு உதவி பணிப்பாளர் எரந்த கமகே இதனை தெரிவித்துள்ளார். ஒரே இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு பறவைகள் அதிக எண்ணிக்கையில் இறந்து கிடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அவற்றின் உடல் மாதிரிகள் பரிசோதனைக்கு அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறந்த பறவைகளை கவனித்த பிரதேச மக்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல்களை அடுத்தே இறந்த பறவைகளை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டனர்.

இல்லையெனில் நரிகளுக்கு இந்த பறவைகளை உணவாக்கியிருக்கும் என்று வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.