விமல் வீரவன்ச புலனாய்வுப் பிரிவு விசாரணை…

0
20
11 / 100

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை அரம்பித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த கூற்றுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் புத்திக்க ஸ்ரீ ராஹுல, குற்ற விசாரணைப் பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறைச்சாலை சம்பவம் ஓர் சூழ்ச்சித் திட்டம் எனவும், கைதிகள் ஒரு வகை போதை மாத்திரைகளை பயன்படுத்தினர் எனவும் விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த கூற்றுக்களின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிந்து கொள்ள இருவரிடமும் விரிவான விசாரணைகளை நடத்துமாறு பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

இந்த கோரிக்கைக்கு அமைய விசாரணை நடத்துமாறு நீதவான், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.