வவுனியா செட்டிகுளம் நகர்ப்பகுதியில் டிப்பர்வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்..

0
8
53 / 100

வவுனியா செட்டிகுளம் நகர்ப்பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாகத் தெரியவருகையில்,

செட்டிகுளம் நகர்ப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியைக் கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற டிப்பர்வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.