கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி…

0
5
50 / 100

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்த ஆண்டு நீக்க வாய்ப்பில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளை கருத்தில் கொண்டு 2020ஆம் ஆண்டில் இவ்வித வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படலாகாதெனவும் நாட்டின் பாவனைக்கு போதுமான வாகனங்கள் ஓராண்டுக்கு உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

கடந்தாண்டு நாட்டுக்கு எவ்வித வாகனங்களும் இறக்குமதி செய்திராத பின்புலத்தில் இவ்வாண்டு வாகன இறக்குமதிகளை மேற்கொள்வது தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்துக்கும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்குமிடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலின் பின்னரே வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறித்த விடயத்தை கூறியுள்ளது.

இவ்வாண்டும் வாகன இறக்குமதியை மேற்கொள்ள முடியாத சூழலே உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திடம் அமைச்சர் கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.