யாழில் கணவன் கண்முன்னே மனைவியின் தீ மூட்டி தற்கொலை..

0
12
50 / 100

யாழ்ப்பாணத்தில் கணவன் கண்முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண்முன்னே மனைவி தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து மனைவி மீது பற்றியிருந்த தீயை கணவன் அணைத்துள்ளதை தொடர்ந்து அந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.