பலங்கொட பகுதியில் சுற்றுலா சென்ற மாணவி மரணம் ..

0
9
11 / 100

பலங்கொட பகுதியில் சுற்றுலா சென்ற மாணவி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கல்தொட்ட பட்டகொல பிரதேசத்தில் மாணவர்கள் சிலர் ஏரியில் மூழ்கிய நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவி உயிரிழந்தமை தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்தொட்ட பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையில் கற்கும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் 15 பேர் நேற்று முன்தினம் பாடசாலை சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு ஏரியில் குளிக்க சென்ற போது 16 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் எவ்வித அனுமதியுமின்றி குறித்த ஆசிரியை மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றுள்ளமை தெரியவவந்துள்ளது. அதற்கமைய ஆசிரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.