சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர், மின்சாரம் தாக்கி படுகாயம்!

0
3

சாவகச்சேரி பகுதியில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர், மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிருசுவில் – தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் கலைச்செல்வன் (வயது 27) என்பவரே, இவ்வாறு காயமடைந்தவர் ஆவார்.

சாவகச்சேரி நகர பகுதியில், கடை தொகுதியின் 4ஆம் மாடியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே , மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி, சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில், தலையில் காயமடைந்த இளைஞன், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.