யாழ்ப்பாணம் –ஆறுகால்மடம் பழம் வீதியில் வீடுடைத்து 41 பவுண் நகைகளை திருடியவர் 3 மணி நேரத்தில் கைது!

0
14
50 / 100

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பழம் வீதியில் வீடுடைத்து 41 பவுண் தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுக் காலை 7 மணியளவில் உரிமையாளர் வெளியே சென்று திரும்பிய போது, வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தன. அது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதன்படி விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபர் நகைகளை விற்பனை செய்ய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடைகளில் நடமாடுவதாக கிடைத்த தகவல்படி, அங்கு சென்று சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 41 தங்கப்பவுண் நகைகளும் 2 கிராம் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டார்.