போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீது தாக்குதல்

0
3
11 / 100

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீது திருகோணமலை – மடத்தடி பகுதியில் சிலர் தாக்குதல் மேற்கொண்டு வாகனத்தின் பக்க கண்ணாடிகளை சேதமாக்கியுள்ளனர்.

“திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் நானும், திருமதி அனந்தி சசிதரனும் பயணித்த வாகனத்தை பெரும்பான்மையினர் தாக்கினர்.இவ்வாறு தாக்குதலை நடத்தியவர்களின் கைகளில் பெற்றோல் போத்தல்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் இருந்த வேளையில்தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் விழ விழ எழுவோம், வீறுகொண்டு எழுவோம் என்றதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த பயணத்தை தொடர்வோம். மேலும் இத்தகைய தாக்குதலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

இந்த பேரணியை நடத்துவதற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை முறியடித்து பொலிகண்டி வரை நிச்சயம் முன்னேறி செல்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்