தனுஷ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகர்…

0
7
51 / 100

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் மாஸ்டர் பட நடிகர் இணைந்திருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தடம், மௌன வலை, மூக்குத்தி அம்மன் படங்களில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவித்தார்கள்.

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்த குட்டி பவானி, மாஸ்டர் மகேந்திரன் இப்படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறித்திருக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.