10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சென்ற இரண்டு லொறிகள் யக்கல பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது…

0
13

 10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சென்ற இரண்டு லொறிகள் யக்கல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கம்பளையிலிருந்து இந்த கழிவுத் தேயிலை கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் யக்கல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தேயிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை தேயிலை சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அறிக்கை கிடைத்ததன் பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அவர் கூறினார்.