மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை …

0
18
11 / 100

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்றிரவு (21) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.