நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்…

0
9
50 / 100

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் குடிநீர் பெற்றுக்கொள்ளப்படும் நீரேந்து பகுதிகள் வற்றிப்போயுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

இதனால், உயரமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, நீரை குறைவாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பொதுமக்களிடம் கோரியுள்ளது.