தலவாக்கலை வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயம்…

0
13
50 / 100

தலவாக்கலை – ரதெல்ல வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற பௌசருடன் மோதி பின்னர் மண்மேடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிபிலையிலிருந்து மரண வீடொன்றுக்கு சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.