எச்சரிக்கையாக இருங்கள்; பொலிஸ் தலைமையகம் முக்கிய அறிவித்தல்…

0
6
50 / 100

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் வார இறுதிதினங்களின் போது மிகவும் கவனத்துடன் செயற்படுவதுடன், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் , எதிர்வரும் வார இறுதிநாட்களை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் மேலும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இந்த காலப்பகுதிகளில் மக்கள் ஒன்றுக் கூடுவதை தவிர்த்துக் கொள்வதுடன் , ஏதேனும் செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகளை நடத்துவது என்றால் குடும்பத்தினருடன் மாத்திரம் இணைந்து செயற்படுவதே சிறந்தது.

இதன்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருமே தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் , நேற்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.