யாழில் வீடொன்றின் பெற்றோல் குண்டு தாக்குதல்!

0
7
12 / 100

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர் என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவருமாகிய ஈ.சரவணபவன் சம்பவ இடத்துக்குச் சென்று விவரங்களைக் கேட்டறிந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.