காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் …

0
8
11 / 100

கொஹுவல − ஆசிரி மாவத்தை பகுதியில் எரிந்த காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி குறித்த நபர் 34 வயதுடைய முஸ்லிம் நபர் என தெரியவந்துள்ளது.

இவர் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தார் எனவும் கூறப்படுகின்றது.

பானந்துறையைச் சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு கொஹுவல பகுதியில் வசித்து வந்துள்ளார்.

குறித்த நபர் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.