நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…

0
29
11 / 100

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

வவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தகர்களின் பங்களிப்பில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் வவுனியா தலைமை பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் குறித்த கமராக்கள் அனைத்தையும் கண்காணிப்படுவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் , நகருக்கு வரும் பயணிகளின் நன்மை கருதியும் நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கவுமே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.