12 ராசிகளுக்குமான இந்தவார பலன்கள்… 19.07.2020 முதல் 25.07.2021 வரை

0
338

மேஷம்

தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுக்கு கிரகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. இரண்டாம் வீட்டில் சுக்கிரன், மூன்றாம் வீட்டில் புதன் ராகு, நான்காம் வீட்டில் சூரியன் ஒன்பதாம் வீட்டில் கேது, குரு பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் உங்க ராசிநாதன் செவ்வாய் என கிரகங்கள் சாதகமா உள்ளன. சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. இந்த வாரம் சுக ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். உயர்கல்வி முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். இதுவரை இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உங்களுக்கு இந்த வாரம் நிலைமை அற்புதமாக இருக்கும். எடுத்த காரியத்தை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும் என்பதால் தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவி இடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்படும் விட்டுக்கொடுத்து போகவும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம் இந்த வாரம் முதலுக்கு மோசமிருக்காது என்றாலும் அகலக்கால் வைக்காதீர்கள். குல தெய்வ வழிபாடும், முன்னோர் வழிபாடும் நன்மை செய்யும்.

ரிஷபம்

ராசியில் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு, புதன், மூன்றாம் வீட்டில் சூரியன் எட்டாம் வீட்டில் குரு, கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக முடியும். வரவே வராது என்று நினைத்த பணம் உங்க கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். சம்பளமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிட வேண்டாம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் அவசரப்பட்டு கடன் கொடுத்து விட வேண்டாம்.

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்களுடைய ராசியில் புதன், ராகு, இரண்டாம் வீட்டில் சூரியன் 12ஆம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் குரு, கேது, எட்டில் சனி என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. இந்த வாரம் கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. சூடான பேச்சுக்கள் வேண்டாம். கோபமாக பேசி சந்தோஷத்தைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதிகார தொனியில் பேசுவதை விட அன்பாக பேசுங்கள் நினைத்தது நிறைவேறும். சுப காரிய பேச்சுவார்தைகள் தொடங்கலாம். திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் வரும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. நீங்க கடன் வாங்கி யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. தான தர்மம் பண்ணுங்க வேலை செய்பவர்கள் விழிப்புணர்வோடும் எச்சரிக்கை உணர்வோடும் இருப்பது அவசியம். திறமைக்கு மதிப்பு மரியாதை கூடும். பகைமை பாராட்டியவர்கள் கூட நட்போடு வந்து பேசுவார்கள். நீங்க எதிர்பார்த்த பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுங்க தடைகள் நீங்கும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் சூரியன், விரைய ஸ்தானத்தில் ராகு, புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் கேது,குரு, ஏழாம் வீட்டில் சனி,ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மூத்த சகோதரர்கள் மூலம் பண வருமானம் வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நிறைய யோகங்கள் நடக்கும் மாதம். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். சுப காரியங்கள் தொடர்பாக சில பயணங்கள் செல்வீர்கள். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள். வங்கிக்கடன் முயற்சி செய்வீர்கள் எளிதாக கிடைக்கும். நீண்ட நாட்களாக அடைக்க நினைத்த கடன்கள் அடையும். கணவன் மனைவி இடையே பேச்சில் விட்டுக்கொடுங்க. உஷ்ண கிரகம் ராசியில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. வீண் செலவுகள் செய்ய வேண்டாம் இல்லாவிட்டால் கையிருப்பு கரையும். திருமண சுப காரியங்கள் பற்றி இந் வாரம் பேசாதீர்கள், கண்டச்சனி கவலையைக் கொடுக்கும் முன்கோபத்தை குறைக்கவும். வார்த்தைகள் வந்த பின்னர் அதை அள்ள முடியாது.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு,கேது, ஆறாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, புதன் பத்தாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. புதிய பதவிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் எதிர்ப்புகளை எளிதில் முறியடிப்பீர்கள். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் வரலாம். எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நீங்க எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் போவது நல்லது. வேலையில் திடீர் மாற்றங்கள் வரும். பொருளாதாரம் அற்புதமாக இருந்தாலும் திடீர் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். மனக்குழப்பங்கள் அவ்வப்போது வரும் தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க.

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு நான்காம் வீட்டில் குரு,கேது, ஐந்தாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் ஸ்தானத்தில் ராகு, புதன் லாப ஸ்தானத்தில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு புதிய வேலைகள் கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பேச்சில் கவனமாக இருங்க. கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களும் கோபங்களும் வரலாம் கவனமாக இருங்க விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினைகள் தீரும். உங்க குடும்ப விசயத்தில மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். வேலையிலும் பண விவாகாரங்களிலும் விழிப்புணர்வோட இருங்க. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வருமானம் வரும். பிள்ளைகளின் படிப்பிற்கு சுப செலவுகள் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க. வியாபாரிகளுக்கு திடீர் லாபம் வரும்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு,கேது, நான்காம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் ஸ்தானத்தில் ராகு, புதன் பத்தாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஜூலை 18ஆம் தேதி காலை 9 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. நிதி நிலைமை நன்றாக இருக்கும் புதிய திட்டங்கள் எதுவும் வேண்டாம். வேலை மாற வேண்டும் வீடு கட்டவேண்டும் என்று நினைத்திருந்தால் அதை ஒத்திப்போடுங்க. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். சிலருக்கு புதிய பொறுப்புகள் வரும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை அன்னை மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு,கேது, மூன்றாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் ஸ்தானத்தில் சூரியன், ராகு, புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஜூலை 18ஆம் தேதி காலை 9 மணி முதல் ஜூலை 20ஆம் தேதி பகல் 3.28 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். மாஸ்க் போடாமல் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். இந்த வாரம் உங்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் ஆதரவும் பெருகும். வருமானம் அபரிமிதமாக கிடைக்கும். வரவே வராது என்று நினைத்த பணம் வரும். எதிர்பாராத நிலையில் திடீர் அதிர்ஷ்டம் வரும். சுக்கிரனால் மாளவியா யோகம் இருப்பதால் புதிய சொத்துக்கள், வண்டி வாகனம் வாங்கலாம். சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் மனரீதியாக உற்சாகமாக இருப்பீர்கள். தெம்பும் தைரியமும் கூடும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் குரு,கேது, இரண்டாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் ஸ்தானத்தில் ராகு, புதன் எட்டாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 20-07-2020 மாலை 03.28 மணி முதல் 22-07-2020 இரவு 07.15 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனம் தேவை. வியாபாரம் தொழிலுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஆதரவாக எந்த கிரகங்களும் இல்லை. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்து போங்க உயரதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைபிடிக்காதீங்க. ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வீண் விரைய செலவு செய்யாதீங்க. வீடுகளை பராமரிப்பு செய்வதற்கான வேலைகளை செய்வீர்கள். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உங்க ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் வேண்டாம் குடும்ப சனி சில குழப்பத்தை ஏற்படுத்துவார். பேச்சில் நிதானம் தேவை. பண நெருக்கடி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குல தெய்வ அருள் கிடைக்க ஆடி அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மகரம்

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு,கேது, ராசிக்குள் சனி, மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்,ஆறாம் ஸ்தானத்தில் ராகு, புதன் ஏழாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 22-07-2020 இரவு 07.15 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அகலகால் வைக்காமல் பொறுமையுடன் செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. சுப காரிய பேச்சுவார்த்தைகளுக்கு இது சரியான நேரமில்லை தவிர்த்து விடவும். உங்க குடும்ப வாழ்க்கையில சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். திடீர் பயணங்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. அமைதியும் நிதானமும் இருந்தால் எதையும் எளிதில் சமாளிக்கலாம்.

கும்பம்

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு,கேது, ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி, இரண்டாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் ராகு, புதன், ஆறாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூடான வார்த்தைகளை தவிர்த்து விடுங்க. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாபாரத்தில் லாபம் வரும். எதிர்பாராத பணவரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும் அதனால் செலவுகளை அதிகரிக்க வேண்டாம். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். சில சுப விரைய செலவுகள் வரும். நல்ல செய்திகள் தேடி வரும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும். பேச்சில் நிதானமாக இருங்க கோபமாக பேசி வம்புல மாட்டிக்காதீங்க. உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. உங்க குடும்பத்தில வாழ்க்கைத்துணையோட ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பண வரவு வரும். விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தேவைப்படும் வாரம் இதுவாகும்.

மீனம்

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்குள் செவ்வாய், ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு,கேது, ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு, புதன் ஐந்தாம் வீட்டில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. தேவையற்ற வாக்கு வாதங்களால் கணவன்– மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் உதவிகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கர்ப்பிணிகள் உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளவும், சத்தான உணவுகளை சாப்பிடுங்க. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. திடீர் செலவுகள் வரலாம், திட்டமிட்டிருந்த காரியங்கள் எளிதில் நடைபெறும். சொத்துக்கள் வாங்கலாம். வீடு வாகனங்கள் வாங்க மேற்கொள்ளும் முயற்சிகள் நன்மையில் முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல் நிலவுகிறது. திடீர் பயணங்கள் வரலாம். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வேலையில் கவனம் செலுத்துங்க நீங்க எப்போது சறுக்குவீர்கள போட்டுக்கொடுக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் கவனம் தேவை.