12 ராசிகளுக்குமான 2020 ஆம் ஆண்டு ராகு – கேது பெயர்ச்சியின் முழுமையான பலன்கள்

0
1223

இதுவரை மிதுனத்தில் ராகுவும், தனுசுவில் கேதுவும் அமர்ந்து ஒன்றரை ஆண்டு காலம் தன்னுடைய பாவகங்களின் ராகு புதன் ஆதிக்கத் தையும், கேது குரு ஆதிக்கத்தையும் பெற்று இருந்து வந்தார்கள். இனி வரும் 01.09.2020 முதல் ஒன்றரை ஆண்டு காலம் ராகு ரிசபத்திலும், கேது விருச்சிகத்திலும் அமர்வதால், ராகு சுக்கிரனின் ஆதிக்கத்தையும், கேது செவ்வாயின்ஆதிக்கத்தையும் பெற்று செயல்படுவார்கள். இந்த ஆண்டு துவக்கத் தில் ராகு தனது சொந்த நட்சத்திரத்தில் திருவாதிரை யிலும், கேது தனது சொந்த நட்சத்திரமான மூலத்தில் இருந்த காலத்திலும் தான் உலக நாடுகள் முழுவதும் கொரோனா என்ற கொடிய தொற்று நோய் உண்டாகி பல உயிர் பலி ஏற்பட்டது. இனி தொற்று நோய் படிப்படியாக குறையும். குருபெயர்ச்சிக்கு பின்பு இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடித்து கட்டுபடுத்தி விடுவார்கள். இனி இந்த பெயர்ச்சிக்கு பின்பு என்ன நடக் கும்? என்பதை பார்க்கும் போது, ராகு உச்சம் பெற் றும், கேது நீசம் பெற்றும் இருப்பதால் நாட்டில் பாலி யில் குற்றங்கள் அதிகரிக்கும். பெண்கள் பாதுகாப் பில் அச்சுறுத்தல் உண்டாகும். பாலியல் குற்றங்க ளால் ஆண்கள் பலர்அரசாங்கத்தால் கடும் தண்டனை கனை அடைவார்கள். இதில் உலக நாடுகள் அனைத் தும் பாதிப்படையும். குடிபோதை பொருட்கள் மூலம் பலருக்கு தீவிரமான பாதிப்பை உண்டாக்கும் என்பதால் குழந்தைகள். பெண்கள் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறா மல் பார்த்து கொள்வதும், விழிப்புணர்வுடன் தவறு நடக்காமல் கண்காணித்து கொள்வதும் நல்லது. புதிய தொழில்களில் புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் ஏற்பட்டு, நாடு வளம் உண்டாகும். வெளி நாட்டு பணிகளுக்கு தொழி லாளர்கள் அழைக்கப் பட்டாலும் பல கட்டுபாடு கள் விதித்து பணியில் சேர்ப் பார்கள் இரவு நேர பணி கள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் தேடுபவர்களு க்கு வேலை கிடைக்கும். ராகு மூன்று நீர் ராசி க ளையும் பார்ப்பதால் கடல் சார்ந்த எல்லை பகுதி களில் பல நாடுகள் தங் களின் எல்லைகளை ஒழுங்குபடுத்திக் கொள் வதும், ஐ.நா. மூலம் ஒப்பந்தங் களை சட்டமாக்கி கொள்வதும் நடக்கும்.மீன் தொழிலில் பல நாடுகள் தங்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வார்கள். எல்லை மீறும் வெளிநாட்டு மீனவர்கள் சட்டபடி தண்டிக் கப்படுவார்கள். கேதுவால் ராசாயண தொழிற்சாலைகள் பல விதி மீறல் காரணமாக தடை செய்யபடுவதும் விபத்தால் பாதிப்பை அடைவதும் நிகழும். குரு பார்வை பெறும் சில ராசிகள் தவிர மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள். ராகு, கேது தோசம் தீர உணவில் கருப்பு உளுந்து கலந்த உணவு மிளகு கலந்த உணவும் சாப்பிடுவதால் தோசம் நிவர்த் தியாகும். மாரியம்மனையும், காளி, துர்க்கையும் வணங்கி தேசிகாய் விளக்கு போட்டு, எல்லா கிழமைகளிலும் இராகு காலத்தில் வணங்கி வர பாதிப்புகள் குறையும். கால சர்பப தோசம் உள்ளவர்கள் பரிகாரம் செய்வது நல்லது. காலத்தை வெல்ல கடவுள் பக்தியால் மட்டுமே முடியும்.

மேஷம்

இதுவரை உங்களின் ராசிக்கு மூன்றாம் வீட் டில் அமர்ந்த ராகு இனி தனஸ்தானத்தி லும், ஒன்பதாம் வீட்டில் இருந்த கேது எட்டா மிடத்திலும் வரும் 01.09.2020 முதல் ஒன்றரை ஆண்டு காலம் அமரவிருப்பது உங்களின் ராசிக்கு பொதுவாக நாகதோசம் என்பதாகும். எனினும் முதல் ஆறு மாதம் உங்களின் ராசி நாதன் பாதிப்பிலிருந்து குறைத்து கொள்ள செய்வதும் சில மாதம் குருபார்வை பெறுவதும் சற்று ஆறுதலாக அமையும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பொருளாதார சிரமங்கள் இருந்து வந்தாலும் படிப்படியாக சரி செய்து கொள்வீர்கள். கணவன் மனைவி உறவுகளில் சச்சரவு ஏற்படும் என்பதால் சற்று நிதானமாக பேசுவதன் மூலம் தவிர்க்கலாம். ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் இருக்கும் காலம் கண்களை கவன மாக பார்த்து கொள்வது அவசியம். பெண்களுக்கு ரத்தத்தின் அளவு குறைந்து உடல் தளர்ச்சி உண்டாகும். உணவு பழக்கங்களை மாற்றி ரத்த குறைவு வராமல் உணவு எடுத்து கொள் வது நல்லது. உளுந்து வடை துவரைபருப்பு சாதம் செய்து உண் பதன் மூலம் நன்மை உண்டாகும். நாகதோச பாதிப்பிலிருந்து நலம் பெற லாம். ராகு, ரோகிணியில் இருக்கும் காலம் தாயார் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டி வரும். பெண்கள் மூலம் சிலருக்கு பாதி ப்பை தரும் என்பதால் எதிலும் எச்சரிக் கையுடன் இருப் பது நல்லது. சிலரு க் கு சக்க ரை அளவு அதிகரிக்கும் என்பதால் உணவு கட்டுபாடு செய்து கொள்வது நல்லது. சக்கரை குறைவான உணவுகளை எடுத்து கொள்வதும், சிறு குழந்தை களுக்கு இனிப்பு வழங்கியும். கார்த்திகையில் ராகு வரும் காலம் தந்தைக்கு உடல் நலமில்லாமல் போகும். தந்தை வழி சொத்து சம்மந்தமான பிரச் சனைகள் உண்டாகும் எதையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது அரசியலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். கேது, கேட்டை நட்சத்திரத்தில் இருக்கும் போது கல்வியில் நாட்டமில்லாமல் போவதும். படித்தவற்றை மறந்துவிடுவதும் உண்டா கும். புத்திரிகளுக்கு திருமணத்தில் தடை உண்டாகும். வேண்டிய வசதிகள் இருந்தும் முயற்சிகள் கைகூடாமல் போகும் என்பதால் கோவில் திரு விழா நடக்கும் போது சுமங்கலி களுக்கு தாலியுடன் வளையல் வாங்கி கொடுத்து வந்தில் நன்மை உண்டாகும். நினைத்தை அடைவீர்கள். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் போது நரம்பு சம்மந்த மான வருத்தம் வரும். அதற்காக மருத்துவம் பார்க்க வேண்டி வரும். புதிய முயற்சி களை கைவிட்டு இருக்கும். தொழிலை செம்மைபடுத்திக் கொள்வது நல்லது. காது சம்மந்தமான பிரச்சனைகள் வரும் தொழி லாளர்களுக்குள் ஒற்றுமையின்மையும், பிரித்தா ளும் தன்மையும் உண்டாகும். வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் விளக்கு போட்டும், கதம்ப மாலை சாத்தியும் ஊனமுற் றோருக்கு உதவிகள் செய்து வந்தால் இந்த பாதிப்பி லிருந்து விடுபடலாம். விசாக நட்சத்திரத்தில் கேது வரும் காலம் திருமண தடை, காரிய தடை, வியா பாரத்தில் மந்தநிலை. பணத்தட்டுபாடு உண்டாகும். குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். பன்னீரில் குழைத்த மஞ்சள் பிள்ளை யாரை நீர் நிலையில் பூசித்து கரைத்து விட்டு விநாயகருக்கு நெய் தீபமேற்றி வணங்கி வர சகலமும் சரியாகும்.

ரிஷபம்

இ து வரை ராகு / கேதுவால் நீங்கள் நாக தோசத்திற்கு ஆளாகி பல்வேறு இன்னல் களை சந்தித்து வந்தீர்கள். நீங்கள் நினைத்தற்கு மேல் எதிர்மறையான பல காரியங்களை சந்தித்து வந்தீர்கள். இனிவரும் 01.09.2020 முதல் ராகு ராசியிலும், கேது களத்திரஸ்தானத்திலும் அமர் வதால் உங்களின் ராசிக்கு நன்மையும், தீமையும் கலந்தே தருவார்கள். களத்திரஸ்தானாதிபதி செவ்வாய் குணங்களை கேதுவும், சுக்கிரன் குணங்களை இராகுவும் பெற்று ஒன்றரை ஆண்டு காலம் இருந்து செயல்படுத்துவார்கள். உங்களின் ராசியில் ராகு உச்சம் பெறுவதாலும் களத்திரஸ்தானத்தில் கேது நீசம் பெறுவதாலும் நன்மையும், தீமையும் சமமாக இருக்கும். ராசியில் ராகு அமர்ந்து ஜென்ம ராகு வாக உச்சம் பெறுவதால் மிருகசீரிட நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் சகோதர்களிடம் வீண்பகையும். மன உளைச்சலும் உண்டாகும். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். மாற்று கருத்துகளை ஏற்க மாட்டீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை கட்டு படுத்துவீர்கள். பெண்களின் திருமண ஏற்பாடுகள் நன்றாக நடக்கும். ரோகிணி ந ட்சத் தி ர த் தி ல் இராகு அமரும் காலம் பெண் களின் வாழ்வில் பல அமைதி யின்மையும், வி ர க் தி ம ன ப்பான் மை யு ம் எ தி லு ம் ஈடுபாடு க ள் குறைந்து விடு வதும் உண்டாகும். இனி என்ன செய்வது என்ற அச்சமும் இருக்கும். எனினும் உங்களின் ராசியை குரு பார்க்கும் காலம் சிலருக்கு அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். பெண்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் செய்யுமிடத்தில் பெண் பணியாளர்கள் மூலம் வருமானம் கிடைக்கும். கார்த்திகை நட் சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசாங்க அனு கூலம் கிட்டும். அரசியல்வாதிகள் போட்டிபோட்டு பதவிக்கு வரும் போது நீங்கள் எளிமையாக பிடித்து விடுவீர்கள். இனி கேது கேட்டை நட்சத்திரத்தில் அமரும் காலம், உங்களின் ராசிக்கு உயர் கல்வி வாய்ப்புகள் அமையும். மேற் படிப்புக்கு வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்புகள் அமையும். புத்திரிகளுக்கு திருமணம் நடக்கும் கணணி மூலமும். ஒன்லைன் மூல மும் வியாபாரம் செய்து முன்னேற் றம் காண்பீர்கள். பரிகாரம் செய்து உங்களின் திரு மணத்தை ஏற்பாடு செய்து கொள்வீர்கள். மருத் துவர்களுக்கு நல்ல வர வேற்புகள் இருக்கும். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் பண புழக்கம் அதிகரிக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். வேலை தேடு பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கார்த்திகை மாதம் மட்டும் வேலைக்கு புதிய செல்வதை தவிர்த்து விடுவது நல்லது. விளையாட்டு போட்டி களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கு பற்றி நலம்பெறுவீர்கள். குடும்பத்தில் நன்மையே உண்டானாலும் சிறு எதிர்ப்புகளை சந்தித்து வேண்டி வரும். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் போது பொன் நகை சேர்க்கையும், பல நாட்பட்ட காரியம் கைகூடும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சுப்ரமணியரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் தொழிலில் மிக பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசியில் இதுவரை ராகுவும், கேதுவும் அமர்ந்து ஞாபக சக்தியை இழந்தும், சிலருக்கு சிந்தனையில் ஒருகிணைப்பு இன்றியும் தவித்து வந்தீர்கள். இனி வரும் 01.09.2020 முதல் ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிசபத்திலும், கேது விருச்சிகத்திலும் வருகிறார்கள். பொதுவாக ராகு / கேது மறைவுஸ்தானத்தில் வரும் போது பெரிய பாதிப்பை தராவிட்டாலும் ராகு விரைய செலவுகளை அதிகப்படுத்துவார். கேது உடல் நல குறைபாடுகளையும் அவசியமில்லாத கடன்படும் நிலை உருவாக்குவார். இதில் குருபார்வை பெறும் காலம் ராகுவின் பாதிப்புகள் குறையும். ராகு மிருகசிரீட நட்சத்திரத்தில் இருக்கும் காலம் போட்டிகளும் வீண் அலைச்சலும் இருக்கும் வெளி நாட்டில் வசிக்கும் சிலருக்கு சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். பகுதி நேர வேலை செய்து வருபவர்களுக்கு வருமானம் பெருகும். சுயதொழிலில் சிலருக்கு லாப நஷ்டம் கலந்தே இருக்கும். வீண் அலைச் சலை தவிர்த்து விடுவது நல்லது. ரோகிணி நட்சத் திரத்தில் ராகு அமரும் காலம் தடுமாற்றமான மன நிலையில் இருந்தாலும் நடப்புக்கு தகுந்த மாதிரி உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள். கார்த்திகை நட்சத்தி ரத்தில் ராகு அமரும் போது. அரசியலிலும், பொது விடயங்களில் கற்பனை வளத்துடன் நல்ல ஆலோசகராக திகழ்வீர்கள். அரசாங்கம் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். வேடிக் கையை வாடிக்கையாக கொள்வதை விரும்ப மாட்டீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் தோல் சம்மந்தமான பிரச்சனைகளும், நரம்பு சார்ந்த உடல் உபாதைகளும் உண்டாகும். சிறு மருத்துவம் செய்து குணம் அடைய செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி அறிவில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயம் செழிக்கும் அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் போது பெண்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உடல் நலனை கவனிக்க வேண்டிவரும். தொழிலாளர்கள் முன்னேற்றம் பெறுவார்கள். மகிழ்ச்சி யாக சுற்றுலா சென்று வருவீர்கள். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் போது மனைவியுடன் இருந்த மன சஞ்சலம் நீங்கி நல்ல உறவு கொள் வீர்கள். புதிய தங்க நகை வாங்கும் வாய்ப்பு பெண்களுக்கு அமையும். திருமண பேச்சு சுமூகமாக அமையும்.

கடகம்

இதுவரை உங்களின் ராசிக்கு ராகு பனி ரெண்டிலும், கேது ஆறிலும் அமர்ந்து பல விடயங்களில் பணவிரயத்தையும், மனரீதியான பாதிப்பையும் தந்து வந்தார்கள். இனிவரும் 01.09.2020 முதல் ஒன்றரை ஆண்டு காலம் ராகு / கேது பெயர்ச்சியாகி, ராகு லாபஸ்தானத்திலும் கேது பஞ்சம ஸ்தானத்திலும் அமர்ந்து பலன் தருவார்கள். ராகு லாபஸ்தானத்தில் அமர்வது வருமானத்தை இருமடங்கு பெருக்கியும், விரயத்தையும் தருவார். பஞ்சமஸ்தானத்தில் உள்ள கேது உங்களின் குலதெய்வ வழிபாடுகளில் தடையையும், உங்களின் ஆஸ்தான குருவின் சாபத்தை பெற செய்வார். இருந்தாலும் உங்களின் ராசிக்கு யோகாதிபதி வீட்டில் கேது நீசம் பெறுவதால் அதிகமான பாதிப்பை தருவதில்லை. மேலும் சிறு பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுவீர்கள். அரசியலிலும், அந்தஸ்திலும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்களின் ராசிக்கு மிருகசீரிட நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் திட்டமிட்ட காரியங்கள் ந ற்ப லன ்க ள ை பெறும். விட்டு போன தொழிலை விருத்தி செய்வதும் தொழிலை மேம்படுத்தி கொள்ள நல்ல முயற்சிகளை செய்வீர்கள். கேதுவின் கெடு பலன்களை ராகு நிவர்த்தி செய்வார். ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலில் செல்வாக்கும். முக்கிய பதவியும் கிடைக்க பெறுவீர்கள். வெளிநாடு சென்றுவருதல். வெளிநாட்டு தொடர்புகள் மூலமும் நன்மை அடை வீர்கள். மக்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு தனிமரியாதை இருக்கும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கிடைக்கும். விடாமுயற்சிகள் செய்து வளம் பெறுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் போது அரசியலிலும், பொது வாழ்வில் முக்கியமான இடத்தை பிடிப்பீர்கள். உங்களிடம் இருக்கும் திறமைகளை முழுவதும் வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரம் வளம் பெறும். கேது கேட்டை நட்சத்திரத்தில் அமரும் காலம் உங்களின் திட்ட மிட்ட செயல்களை சிறு தடை உண்டாகும். தொடர் முயற்சியால் நன்மை பெறுவீர்கள். சிவப்பு நிற தடிப்புகள், வெளீர் நிற புள்ளிகள் தோலில் தோன்றி மறையும். காவல் துறை யில் பணிபுரிபவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மூலம் நன்மை பெறுவீர்கள். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் போது போட்டி மனப்பான்மையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்டாகும். தொழிலாளர் இடமாற்றம் உண்டாகும். பணியில் வேறு இடம் மாறுவீர்கள். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் போது எதிர்பாராத தனலாபமும், கொடுக்கல் வாங்கலில் ஆதாயமும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியம் தாமதமானாலும் நடக்கும். பொரு ளாதார நிலை வளம் பெறும்.

சிம்மம்

இதுவரை உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத் தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து, உங்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததும், எதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமலும் இருந்த நிலை மாறி, இனிமேல் 01.09.2020 அன்று ரிசபத்திற்கு ராகுவும், விருச்சிகத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகி, கேந்திர ஸ்தானங்களில் ராகு / கேது அமர்வதால் நல்லபலன்களை தரும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த ராகு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தருவார். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு ஏதாவது வழியில் நினைத்த பதவி கிடைக்கும். சுகஸ்தானத்தில் கேது அமர்வதால் அடிக்கடி உடல்நல குறைகள் வந்தாலும், வாகனத்தில் அடிக்கடி பயணம் செய்யும் யோகம் கிடைக்கும். சகோதரர்களின் ஆத ரவு கிடைக்கும். திட்டமிட்டபடி அனுகூலமான விடயங்கள் கைகூடும். இதுவரை ராகு மிதுனத்தில் இருந்த போது வந்த லாபத்தை அனுபவிக்க முடியாமல் இருக்கும் போது, மிருகசீரிடம் 3, 4ம் பாதத்தில் ராகு அமர்வதால் உங்களின் தொழில் சார்ந்த பிரச்னைகள் மறையும் எதிர்பார்த்த இலக்கை முடி வுக்கு கொண்டு வருவீர்கள். அதிகாரத்தில் இருக்கும் சிலருக்கு பாதிக்கு மேல் பலன்களை பெறுவீர்கள். மேலும் அதிகரிக்க இறைவழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தாயார் உடல்நலன் பாதிக்கும். தந்தைக்கு மூச்சு குழாய் சுவாசம் விடுவதில் சில காலம் கஷ்டமாக இருக்கும் வேலை தேடு பவருக்கு வேலை கிடைக்கும். விவசாய விளை நிலங்களில் உற்பத்தி பெருகும். அனைவரிடமும் நல்ல மதிப்பை பெறுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத் தில் ராகு அமரும் காலம் அரசியலிலும், அரசாங்க காரியத்திலும் உங்களின் எண்ணும் நிறைவேறும் தொடர் விடயங்களை விடாமல் செய்து நல்ல பலனை பெறுவீர்கள். கேது, கேட்டை நட்சத்திரத்தில் அமரும்போது கேள்வி ஞானம் பெறுவீர்கள். எதையும் புரிந்து கொண்டு விரைவாக செயல்படுவீர்கள். விரும்பிய இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். சிலருக்கு ஆணவங்களால் பிரச்சனைகள் உருவாகி விரைவில் மறையும். அரசாங்க பதிவுகளில் சில சட்ட சிக் கல் வந்து மறையும். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் போட்டிகளை தவிர்த்து சுமூகமான உறவுகளை வளர்த்துக் கொள்வீர்கள். உறவுகளை இணைத்துக் கொள்வீர்கள். பாதியில் நின்ற காரியங்கள் செயல்பட துவங்கும். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப் பீர்கள். காவல் துறையில் பணிபுரிபவர்களுக் கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். கேது விசாகம் நட்சத்திரத்தில் அமரும் காலம் வேண்டிய வசதிகளை நீங்களே உருவாக்கி கொள்வீர்கள் தங்க நகை சேமிப்பு மூலம் கிடைக்க பெறுவீர்கள். அதிகாரத்தில் திறம்பட செயல்பட்டு வாழமுடியும் என்று நிருபித்து காட்டுவீர்கள். மனைவி வழியில் உதவியும் நற்பலன்களும் பெறுவீர்கள்.

கன்னி

இதுவரை உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் ராகுவும், சுகஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து செய்யும் தொழில் முன்னேற்றமும், உடல் நலனின் ஏதாவது தொந்தரவும் கொடுத்து வந்தார்கள். இனிவரும் 01.09.2020 முதல், ராகு பாக்கியஸ்தானத்திலும், கேது முயற்சிஸ்தானத்திலும் அமர்வது உங்களின் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கும். மேலும் ஒன்பதாமிடமான பாக்கியஸ்தானத்தில் ராகு அமரும் போது குருவும் ராகுவை, உங்களின் ராசியை ஒராண்டு காலம் பார்ப்பதால் ராகுவால் கெடுபலன்கள் குறைக்கப்படுவதும் மேலும் பாவ கிரகங்கள் தரும் தீய பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். அரசியலிலும், பொது விடயங்களில் நல்ல பல ஆலோசனைகளை தருபவராக இருப்பீர்கள். முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வது யோக பலன்களையே தருவார் எடுக்காத முயற்சிகளும் நன்மையே தரும். கேது ராசியை பார்ப்பது நல்ல பலனை தரும். இனி ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் (ரிசபம்) பயணிக்கும் காலம் செயல்களில் தைரியமும் செய்த காரியங்களை தொடர் முயற்சி செய்து க ண ்கா ணி ப்ப து நடக்கும். விவசாய நிலங்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் கலைதுறையினருக்கு எதிர்பார்த்த வரவேற்பும். தொடர் நிகழ்ச்சிகளும் அமையும். அடுத்து ராகு ரோகிணி நட்சத்திரத்தில் அமரும் போது பெண் களின் வாழ்க்கை சூழ்நிலையில் சில மாற்றம் உண்டாகும். பொது விடயங்களில் மனமகிழ்ச்சி கொள் வதும் ஆடம்பரமான வாழ்க்கை சூழ் நிலையும் அமையும். தாயாருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனை உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலத்தில் அரசியலில் எதிர்பார்த்த பலன் கிடைக்க விட்டாலும். உங்களின் கௌரவம் நன்றாக இருக் கும். அரசாங்க பணிகளில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். ராகு மிதமான பலன்களை ஒன்றரை ஆண்டு காலம் தருவார். இனி கேது மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் அமரும் காலம் யோக காலமாக அமையும் எடுக்கும் முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் கேது இருக்க, கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஓன்லைன் வர்த்தகம் நல்ல முன்னேற்றம் தரும். புதிய திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எந்த விடயமாக இருந்தாலும் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள் அனுச நட்சத்திரத்தில் கேது அமர உங்களின் எதிரி களிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். கண் திருஷ்டி போன்ற விடயங்களை பரிகாரம் செய்து நிவர்த்தி செய்து கொள்வீர்கள். எதை செய் தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். விளையாட்டு துறையில் சிலருக்கு வெகுமதி கிடைக்கும். விசாக நட்சத்திரத்தில் அமரும் காலம் கேதுவால் திடீர் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். உங்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சி உண்டாகும். குற்றங்களை மறைந்த வாழ்வில் உன்னத நிலை அடைய உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்

இதுவரை உங்களின் ராசிக்கு மூன்றாமி டத்தில் கேதுவும், பாக்கியஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்து பலவழிகளில் போட்டியும் எதிரிப்பையும் சந்தித்து வந்தீர்கள். சிலருக்கு வாகன யோகமும் கிடைக்க பெற்றீர்கள். இனிவரும் 01.09.2020 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி, உங்களின் ராசிக்கு இரண்டில் கேதுவும், ஏழில் ராகுவும் அமர்வது நாகதோசமாக அமையும். ராகு சுக்கிரன் வீடான உங்களின் ராசிநாதன் வீட்டில் அமர்வது உங்களுக்கு கெடுபலன்கள் குறையும். குடும்ப ஸ்தானத்தில் கேது அமர்வது குடும்பத்தில் சில சச்சரவு வந்தாலும் அதனை உங்களின் திறமையால் வெற்றி காண்பீர்கள். பேச்சாலும், தைரியத்தாலும் சிலருக்கு காரிய அனுகூலம் கிடைக்கும். புதிய முயற்சிகள், தொழில் வாய்ப்புகள், பழைய கடன்களை தீர்த்து விடுவதும் உண்டாகும். ஓராண்டுக்கு ராகுவை குரு பார்ப்பது உங்களுக்கு ஆறுதலை தரும். எவ்வளவு நெருக்கடிகள். வந்தாலும் அதிலிருந்து மீண்டு விடுவீர்கள். இனி ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் அமரும் காலம் உங்களின் ராசிக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் உண்டாகும். எதிரிப்பார்த்த வெற்றி கிடைக்கா விட்டாலும் நல்ல அனுபவத்தை பெறுவீர்கள். முக்கிய பதவியில் இருப்பவர்களுக்கு சில பொறுப்புகள் வந்து செயல்படவேண்டி இருக்கும். வெளிநாடு செல்வதில் சிலருக்கு தாமதம் உண்டா கும். அடுத்து ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் பெண்கள் வாழ்க்கையில் திருமண வரன் அமைவதும் திருமணம் கைகூடுவதும் நடக்கும். வழிபாட்டு ஸ்தலங்களில் நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பு கி டைக் கு ம் . சிலரு க் கு ஏமாற்றம் அளிக்கும். அரசியலில் முன்னேற்றம் இருந்து வரும். இனி கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு வரும் காலம் அரசாங்க காரியங்களில் உங்களின் எதிர்பார்ப்பு நடக்கும். நல்ல அதிகாரிகளின் தொடர்புகளால் அனுகூலமான காரியங்களை செயல்படுத்துவீர்கள். முக்கிய நடவடிக்கைகளுக்கு உங்களின் உதவிகள் பயன்படும். இனி கேது கேட்டை நட்சத்திரத்தில் வரும் காலம் தாயார் வழி சொந்தங்கள் உறவு பலப்படும். புத்திரிகளுக்கு வாழ்வில் முன்னேற்றம் உண் டாகும். தேவைப்படும்போது மட்டும் பேசி, பேச்சை குறைத்து கொள்வீர்கள். பொருளாதாரத்தில் உங்களின் திறமை ால் நல்ல வருமானம் பார்ப்பீர்கள். ஒன்லைன் வர்த்தம் முன்னேற்றம் தரும். இனி அனுச நட்சத்திர்த்தில் கேது அமரும் போது உங்களின் பேச்சில் சில நேரம் நிதானமாக இருப்பது நல்லது. ஆடம்பர விடயங்களில் ஈடுபாடு உண்டாகலாம். ஒ வ்வாமை யால் பாதிக் கப்பட்டு, மருத்து வத்தால் குணப்படுத்தி விடுவீர் கள்.உங்களின் பொது வாழ்வு விடயத்தில் மக்களிடம் நெருக்கமாக செயல்படுவீர்கள். இனி விசாகத்தில் கேது அமரும் போது திருமண வாழ்வில் சிறப்பாக பலன் பெறுவீர்கள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். தொழிலிலும் செயலிலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

இதுவரை உங்களின் ராசிக்கு தன ஸ்தா னத்தில் கேதுவும், எட்டாமிடத்தில் ராகுவும் அமர்ந்து நாகதோச பலன்களை அடைந்து வந்தீர்கள். எதையும் எளிமையாக செயல்பட முடியாமல் அவதிபட்டு வந்தீர்கள். இனிவரும் 01.09.2020 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி விருச்சிக கேது, ஜென்ம கேதுவாகவும், ரிசப ராகுவாகவும் அமர்கிறார்கள். ஜென்ம கேது தெய்வ அனுகூலங்களையும், ஆன்மீக அனுபவங்களையும் பெறுவீர்கள். ரிசப ராகு, களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் திருமண தடை, மனைவி உறவுகளில் சச்சரவு, நண்பர்களிடம் பகை, வெளிநாட்டு சென்று வருதல் வெளிநாட்டு வர்த்தம் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். கூட்டுதொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் செயல்பாடுகளில் உறுதியுடன் செயல்படுவீர்கள். பொதுவாக ராகு / கேது கெட்டு விட்டால் கெடுபலன்களை தருவார்கள். உங்களின் ராசிக்கு உச்சம் பெறுவதால் களத்திர தோசம் தவிர மற்ற விடயங்களில் நல்ல முன்னேற்றம் தருவார். மிருகசீரிட நட்சத்தி ரத்தில் ராகு அமரும் காலம் திருமண தடை களும், நண்பரிடம் பகையும் உண்டாகும். வீண் வாக்குவாதம் கொள்வதும், எதையும் நம்பாமல் இருப்பதும் நடக்கும். சகோதரர்களிடம் சச்சரவு உண்டாகும். பூமி சம்மந்தமான பிரச்சனைகள் உண்டாகும். வெளிபடுத்தி கொள்ளும் விடயங்களில் கவனமாக இருப்பது நல்லது. முதலீடு இல்லாத கமிசன் தொழிலில் வளம் பெறுவீர்கள். பாதியில் நின்ற காரியம் வெற்றியை தரும். ரோகிணி நட்சத்தி ரத்தில் ராகு அமரும் காலம் வெளிநாட்டு வேலை சம்மந்தமான பணிக் சிறப்பாக அமை யும் வெளி நாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு வரவிருப்பமுள்ளவர்களுக்கு விரை வில் வாய்ப்பு அமையும். தாயார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். குரு பார்வை பெறும் ஓராண்டு காலம் வரை தாயார் உடல் நலம் சரியாகும். அதன் பின்பு கவனமாக இருக்கவும். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலில் பல மாற்றங்களை உருவாக்குவீர்கள். அரசியல் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். கேது கேட்டை நட்தசத்திரத்தில் அமரும் காலம் பழங்கால வரலாற்று சுவடுகளை பற்றிய விவரங்களை அறிந்துர் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சம யோசிதமான விடயங்களின் தேர்ச்சி பெறுவீர்கள். கலைதுறையினருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அமைதியாகவும் எளிமையாக வும் இருப்பீர்கள். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் போட்டிகள் இருந்தாலும் எதிலும் சாதிக்க வேண்டு மென்று உணர்வு மேலோங்கும் சின்ன விடயத்தை கூட மிகவும் ஆழமாக யோசித்து செ ய ல்ப டு த் துவீர்கள். விளையாட்டு துறையில் தனி கவனம் செலுத்துவீர் கள். வேலை சார்ந்த விடயங்களில் பொறுப்புடன் செயல்படுவீர்கள். மருத்துவர்களுக்கு இது நல்ல காலமாக அமையும். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலிலும், அரசாங்க பணிகளிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். முக்கிய பதவிகள் கிடைக்கப் பெற்று வாழ்வில் வளம் பெற வாய்ப்புகள் அமை யும். ராணுவம், பொலீஸ் துறையில் உரிய மரியாதை கிடைக்க பெறுவீர்கள். நல்ல விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

தனுசு

இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம கேது வும், களத்திர ராகுவும் இருந்து உங்களின் வாழ்வில் வேறு சோதனைகளை தாண்டி எதிர்கால நலன் கருதி திறம்பட செயல் பட்டு வந்தீர்கள். எதிர்ப்புகளை வென்று சாதனை படைத்தீர்கள். இனிவரும் 01.09.2020 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் ராகுவும், பனிரெண்டில் கேதுவும் அமர்வது உங்களுக்கு சாதகமாக அமையும். கடன்படுவதிலிருந்து விடுபடுதல் மீண்டுவருதல் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். ஆறாமிட ராகு எட்டாமிடத்தையும். நான்காமிடத்தையும் பார்வை இடுவது உங்களுக்கு சாதக மான சூழலை உருவாக்கும். வெளி நாட்டு பயணத் தடைகளை நீக்க வழிவகுக்கும். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் பெற செய்யும் மறைமுக எதிரிகளிடமிருந்து உங்களுக்கு பாதுகாப்பு கிடைக் கும். குரு பெயர்ச்சி காலம் வரை 2021 முடிய நற்பலன்கள் கிடைக்கும். அதன்பின்பு எச்சரிக்கை யாக இருப்பது நல்லது. கேது விரய ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் தனஸ்தானத்தையும் பார்வை இடுவது செய்யும் தொழிலில் இருந்த சிறு தடை நீங்கி, குருவை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் நிதானம் மிகவும் அவசியமாகும். இனி ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் இருக்கும் காலம் வரை உங்களின் ராசிக்கு நற்செய்திகள் உண்டாகும். சகோதரர்களின் அன்பை பெறுவீர்கள். விவசாய விளைச்சலும் பொருளாதார நன்மை களும் உண்டாகும். விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவீர்கள். வி டு ப ட ்ட க ாரியங்களை செ ய ல் படுத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். வீடு கட்டும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தாயார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்தி செயல் படுவது நல்லது. வங்கிகளில் பிறருக்கு பிணயம் இடுவதை தவிர்த்துவிட வேண்டும். உங்களின் முயற்சிகளுக்கு சிறு தடை வந்து விலகும். சுதந்திரமாக எதையும் செய்ய முடியாமல் போகும். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலிலும், அரசாங்க காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு அலைந்து பிரச்சனைகளையும் வெல்வீர்கள். உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிபடையான உங்களின் பேச்சிற்கு நல்ல மரியாதை கிடைக்கும். வரவுக்கு தகுந்த செலவு உண்டாகும். இனி கேது கேட்டை நட்சத்திரத் தில் அமர்ந்து செயல்படுவதால் கல்வி யாளர்களுக்கு உயர்கல்விகளில் நல்ல அனுபலம் கிடைக்கும். அறியாத பல வாய்ப்புகளை பெறு வீர்கள். மாணவர்கள் உங்களின் அனுபவத்தை பயன்படுத்தி கொள் வார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். காரிய அனுகூலம் கிடைக்கும். அனுச நடசத்திரத்தில் கேது அமரும் காலம் தொழிலில் முன்னேற்றம் அடைந்தாலும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். பணி அமர்த்தபட்ட தொழி லாளர்கள் அடிக்கடி மாறுவார்கள். எனினும் நீங்கள் எந்த தடையின்றி செயல்படுவீர்கள். போட்டிகளை தவிர்த்து விடுவீர்கள். உங்களின் எண்ணங்களை செயல்படுத்தி காட்டுவீர்கள். சமையல் பாத்திரங் களை உற்பத்தி செல்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் வியாபாரத்தில் நல்ல லாபமும். தனி திறமையுடன் செயல்பட்டு உங்களின் எதிர்காலம் சிறக்கும்.

மகரம்

இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் கேதுவும், ஆறாமிடத்தில் ராகுவும் அமர்ந்து பல அனுபவங்களை பெற்று திகழ்ந்தீர்கள். எதிர்பாராத வருமானம், அதற்கு தகுந்த செலவு என்று வரவும் செலவும் பகிர்ந்துகொண்டீர்கள். பல எதிர்ப்புகளை சந்தித்து அனைத்தையும் சமாளித்து வெற்றிகண்டீர்கள். இனி வரும் 01.09.2020 அன்று முதல், உங்களின் ராசிக்கு ராகு பூர்வ புண்ணியஸ்தானத்திலும், லாப ஸ்தானத்தில் கேதுவும் அமர்வதால் தனி திறமையுடன் செயல்படுவீர்கள். அரசியலிலும், ஆன்மீகத்திலும் உங்களின் நாட்டம் சிறப்பாக அமையும். புதிய சகாப்தத்தை உருவாக்கிட முயற்சிகளை செய்வீர்கள். சொந்த வீடு கட்டும் வாய்ப்பை பெறுவீர்கள். பல காலம் உங்களின் காதலை சொல்லாமல் இருந்துவிட்டு இப்பொழுது வெளிபடுத்துவீர்கள் பகை கொண்டவர்கள் இனி உறவு கொள்வார்கள். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு அது அமையும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து நல்ல பலன் பெறும் வாய்ப்புகள் அமையும். கடல் கடந்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக அமையும் கேது லாபஸ்தானத்தில் நீசம் பெறுவதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். சொத்து பிரச்சனைகள் பேசி தீர்க்கும் வாய்ப்பு அமையும் கலைஞர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். இனி ராகு மிருகசீரிட நடசத்திரத்தில் அமரும் காலம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலையில் பல மாற்றம் உண்டாகும். பதவிகளுக்கு பலரின் பகையை வளர்த்து கொண்டாலும், இறுதியில் வெற்றி உங்களுக்கு அ மை யும். சகோதரர்களின் ஆ த ர வு கிடைக்கும். பெண்களுக்கு திருமண தடை நீங்கி திருமண வாய்ய்பு கிட்டும். புதிய தொழில் துவங்குவது சம்மந்தமான விடயங்களில் சந்திப் புகள் பலன்தரும். விளையாட்டுதுறையில் சிலர் சாதனைகளை நடத்தி காட்டுவார்கள். ராகு ரோகிணி நட்சத்திரத்தில் அமரும் காலம் பெண் களின் வாழ்க்கையில் சோதனை உண்டாகலாம். ஆண்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. அதிக நெருக்கம் ஆபத்தாக அமையும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தாயார் உடல்நலனில் கவனம் தேவை. அரசியலில் உங்களின் எதிர்பார்ப்பு நன்மையை தரும். காலம் கடந்த சிந்தனைகளால் பலன் தராது என்பதால் யோசித்து செயல்படுவது நல்லது. கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலில் தனித்திறமை கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோசம் பொங்கும். கவலைகளை மறந்து சுபிட்சம் அடைவீர்கள். ஆடம் பர வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரு வீர்கள். இனி கேது கேட்டை நட்சத்திரத்தில் அமரும் காலம் புத்திசாலி நண்பர்கள் சேர்க்கையும். புதிய தகவல்களை பெறும் வாய்ப்பும் அமையும் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளுக்கு நல்லபலன் கிடைக்கும். செய்யும் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உங்களை மதித்து நடப்பவருக்கு மரியாதை தருவீர்கள். பிறருக்கு அதை தெரியப் படுத்தி காட்டுவீர்கள். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் தொழில் சார்ந்த பணிகளுக்கு வெளி இடங்களில் தங்கும் சூழ்நிலை உருவாகும். வெளிநாடு பயணம் செல்லும் வர்த்தகம் சார்ந்த வெளியூர் பயணப் பயனுள்ளதாக அமையும். அரசியலில் புதிய பதவிகளை வகிக்கும் சூழ்நிலை உருவாகும் அமைதியான சூழ்நிலைகளை உரு வாக்கி கொள்வீர்கள். சிலநேரம் விட்டுகொடுத்து நற்பெயர் பெறுவீர்கள். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் திடீர் அதிர்ஷ்டமும் எதிர்பாரான வரவும் கிடைக்கும்.

கும்பம்

இதுவரை உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்களை கிடைக்கவிடாமல் பல்வேறு இடையூறுகளையும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் செய்தது, பேசுவது சிறு காரியமாக இருந்தாலும் கடுமையான போராட் டத்தின் முடிவில் அமையும். இனிவரும் 01.09.2020 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி ராகு நான்காமிடத்திலும், கேது பத்தாமிடத்திலும் அமர்வது உங்களின் நீண்டநாள் காரியங்கள் செயல்படதுவங்கும். ராகு சுகஸ்தானத்தில் அமர்ந்து சுறுசுறுப்பாக செயல்படசெய்வதுடன் இன்றைய காலசூழ்நிலைகளுக்கு தகுந்தபடி உங்களின் நிலையை மாற்றிக்கொள்வீர்கள். வீடுகட்டுதல், வாகனம் வாங்கும் யோகம், ஏற்கனவே இருக்கும் வீட்டை மொடர்னாக மாற்றுதல் போன்ற காரியங்கள் நடக்கும் உங்களின் தொழிலில் பலமாதம் முடங்கிய நிலைமாறி நன்மை உண்டாகும். வெளிநாட்டு வர்த்தகம் சார்ந்த முயற்சிகள் நல்ல பலனை தரும். எதிர்கால திட்டங்களுக்கு உங்களின் செயல்களில் முன்னேற்றம் உண்டா கும். ராணுவம், காவல் துறைகளில் பணி புரிபவர்களுக்கு பதவிஉயர்வுகிட்டும். தொடர்ந்து கஷ்டப்பட்டாலும் அதற்கு தகுந்த நல்லபலன்களும் உங்களுக்கு கிடைக்கும். இனி ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் அமரும் காலம் உங்களுக்கு சுயமுயற்சிகளுக்கு நல்லபலன் கிட்டும். நீங்கள் தொடுத்த பல காரியங்கள் பல நாட்களால் கிடப்பில் கிடந்த நிலைமாறி நன்மை பெறுவீர்கள். வசதிகளை ஏற்படுத்திக் கொள் வீர்கள். முக்கிய பணிகளில் திடடமிட்டபடி செயல் படுவீர்கள். இளைய ச கோத ர ரின் உதவி கிடைக் கும். விரைய குரு கஷ்டங்களை தந்தாலும் உங்களில் ராசிநாதன் உங்களுக்கு உதவிகளை செய்து நிலைமையை சரி செய்வார். ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தாயார் உடல்நிலை கவனம் செலுத்தவேண்டி வரும். அரசியலில் தனி செல்வாக்கு உண்டாகும். மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு இருக்கும். புத்திரிகளுக்கு திருமண வாய்ப்புகள் அமையும் பணபுழக்கம் தராளமாக இருக்கும். வசதிளை பெருக்கி கொள்வீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் உங்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் அமையும். அரசாங்க காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து தருவீர்கள். பொது விடயங்களில் உங்களின் பங்கு பயனுள்ளதாக அமையும். பொருளாதார நிலை சீராக இருக்கும். இனி கேது கேட்டை நட்சத்திரத் தில் அமரும் காலம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிவரும். உயர்கல்வியின் சிலருக்கு கவனமாக இ ருக்க வேண் டி வரும். போட்டிகள் பல இருந்தாலும் உங்களின் தனிகவனம் இருந்தால் வெற்றி பெறலாம். கணணி, ஒன்லைன் வர்த்தகம், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை மூலம் லாபம் பெறுவர். தாய்வழி உறவுகள் சச்சரவு இருக்கும். பேச்சிலும், செயலிலும் அதிகாரமும், ஆணவமும் கலந்திருக் கும். எதிர்கால திட்டத்தை செயல்படுத்துவீர்கள். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் தொழி லாளர்களிடம் ஒற்றுமையின்மையும் பல இடங் களில் போட்டி மனப்பான்மையும். பணியை பகிர்ந்து கொள்வதில் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இதின் சமரசம் செய்து கொள்வதில் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்களை கலைதுறையினர் உருவாக்கி கொள் வீர்கள். சாதனைகளை செய்து வாழ்த்துக்களை பெறுவீர்கள்.

மீனம்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்கில் ராகுவும், பத்தில் கேதுவும் அமர்ந்து லாப நஷ்டங்களை சமமான பகிர்ந்து, வரவும் செலவும் வந்து பலனை அனுபவித்து வந்தீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் சென்று, தொழில் செய்யும் போது பிறருக்கு பலன் கிடைக்கும்படி உழைத்து கொடுத்து அதில் நீங்கள் ஒருபங்கு அனுபவித்து வந்தீர்கள். இனிவரும் 01.09.2020 அன்று முதல் ராகு மூன்றில் யோக ராகுவாகவும். பாக்கியஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து பலன்தர இருப்பது நன்மையே உண்டாகும். ராகு உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலனை தருவதுடன் குடும்பத்தில் பல நாட்கள் இருந்து வந்த குழப்பத்தை தீர்த்து வைப்பீர்கள். தொழிலில் தடைபட்டிருந்த காரியங்களை செயல்படுத்துவீர்கள். மூன்றாமிடம் முயற்சி மட்டுமின்றி வெற்றி கீர்த்திஸ்தானம் என்பதாலும் உங்களின் ராசிக்கு நல்லபலனை தருவது ராகு செயல்படுத்தவார். பாக்கியஸ்தானத்தில் கேது மகான்கள் தரிசனம், தீர்த்த யாத்திரை, வெளிநாடு செல்ல தடைநீங்கி பயணம் மேற்கொள்ள வழிவகுத்து கொடுப்பார். பொது வாக ராகு / கேது எல்லா ராசிக்கும் நன்மையும் தீமையும் வழங்குவார்கள். ஆனால் உங்கள் ராசிக்கு இருவரும் நன்மையே செய்வார்கள். இனி மிருகசீரிட நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் வாராகடன் வசூல் ஆகும். தடைபட்ட காரியங்கள் செயல்பட துவங்கும் பெண்களுக்கு கணவன் வழியில் நன்மை உண்டாகும். விளை யாட்டு துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆன்மீக செயல்களில் நாட்டம் கொள்வீர்கள். பாதி யின் நின்ற காரியம் செ ய ல்பட து வ ங் கும். ச கோத ர ர் வழியில் ஆதாயம் கிடைக்கும். பூமி சம்மந்தமான விடயங்கள் சுமூகமான தீர்வு உண்டாகும். இனி ரோகிணி நட்சததிரத்தில் ராகு அமரும் காலம் தாயார் உடல்நலனின் முன்னேற்றம் உண்டாகும். தாயார் வழி சொந்தங்கள் உறவு பலப்படும். அரசியலிலும் உத்தியோத்திலும் மேன்மை அடைவீர்கள். புதிய திட்டங்களை செயல் படுத்துவீர்கள். வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும். தொழில் சார்ந்த கடல்வழி பயணம் சிறப்பாக அமையும். மனதில்பட்ட விடயங் களை செயல்படுத்தி காட்டுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தனி திறமையானவராக திகழ்வீர்கள். தொழிலிலும், செயலிலும் முழு ஆர்வம் செலுத்துவீர்கள். உங்களின் கருத்து களுக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கும். உங்களின் முதலீடுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் இனி கேது கேட்டை நட்சத்திரத் தில் அமரும் காலம் திருமண வாய்ப்புகளையும், வீடுகட்டும் வசதி, வாகன வசதிகளை பெறுவீர்கள். ஆன் மீகத்தில் நாட்டம் ஆன்மீக சொற்பொழியும், வழி பாடும் செய்வீர்கள் தீர்த்த யாத்திரை செல்வீர்கள். கைபேசி மூலம் புதிய தகவல்களை பெறுவீர்கள். அதில் ஆர்வம் காட்டு வீர்கள். தந்தை வழியில் நற்பலன்கள் கிடைக்கும். பித்ரு கர்மா விலகும் அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் எதிர்ப்புகளை வெல்வீர்கள். சிலருக்கு மட்டும் சட்ட ரீதியான பாதிப்பு வரும். சீக்கிரமே சரி யாகி வெளியே வந்து விடுவீர்கள். பெண்கள் கவன முடன் இருப்பது நல்லது. விசாகம் 4ம் பாதத்தில் கேது அமரும் காலம் செல்வாக்கும், நன்மையும் பெறுவீர்கள். குடும் பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். எதிர்பார்த்தவர்களிடம் பணம் வரும். சுற்றுலா சென்று வருவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.