14 மில்லியன் பைசர் கொவிட் தடுப்பூசி தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு

0
6
11 / 100

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 14 மில்லியன் டோஸ் பைசர் – பயோ என்டெக் கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷா தசநாயக்க கூறினார்.

டிசம்பர் மாதத்தில் பெல்ஜியத்திலுள்ள பைசர் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து இத்தடுப்பூசித் தொகுதி பெறப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் அவசர பயன்பாட்டிற்கான ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதியளித்தது.

அதன் பின் ஆரம்பத்தில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இது வழங்கப்பட்டது.