இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவர்தான்… பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்

0
241
64 / 100

இலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவராகும். அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது. அவரது ஜாதகம் என்னிடம் உள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை என்றால் துப்பாக்கியில் சுட்டுக்கொள்வதாக நான் கூறினேன். எனினும் அது சோதிடத்தில் இருந்த விடயம் அல்ல.

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் வெற்றி பெற செய்வதற்கே அன்று நான் அவ்வாறு கூறினேன்.

நான் சோதிடம் பார்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அறவிடுவேன். ஜாதகம் ஒன்று தயாரிப்பதற்கு 26500 ரூபாய் அறவிடுவேன்.

இணையத்தள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.