200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்

0
0
11 / 100

200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, நாளைய தினம் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களையும், அதிபர்களையும் வரவேற்பதற்காகப் பாடசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு வகையில், ஆசிரியர்களின் வரவு குறைவாகக் காணப்பட்டால், அது நாளை மற்றும் நாளை மறுதினம் மாத்திரமேயாகும்.

இன்று காலைத் தம்முடன் அதிபர் சங்கம் உரையாடியதுடன், நாளைய தினம் பாடசாலைக்குச் சமுகமளிப்பதாகக் கூறியதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சில சங்கங்கள் நாளை மறுதினம் முதல் பாடசாலைக்குச் சமுகமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பெருமளவான ஆசிரியர்களும் பாடசாலைக்குச் சமுகமளிப்பார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நாளையும், நாளை மறுதினமும் பாடசாலைக்குச் செல்வதில்லை என, இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.